கோட்டக்குப்பத்தில் தென்னை வளர்ச்சி வாரியக்குழுவினர் ஆய்வு


வானூர் தாலுகாவில் தானே புயலின் தாக்கத்தில் கடலோர கிராமங்களில் சுமார் 300 எக்டே ரில் பாதிப்புக்குள்ளாகியுள் ளது. 20 முதல் 30 ஆண்டுகள் வயதுள்ள மரங்கள் புயலின் தாக்குதலால் முற்றிலும் சாய்ந்து விட்டது. சில இடங்களில் தென்னை மரத்தின் துணிப்பகுதிகள் காற்றின் வேகத்தினால் பாதிப்படைந்துள்ளது.

 

தென்னை விவசாயிகள் வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்ததால் விவசாயிகளுக்கு உதவிட மாவட்ட ஆட்சியர் சம்பத் தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு மண்டல இயக்குநர் ரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் மனோகரன் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கம் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் உள்ளடக்கிய நிபுணர்குழு கோட்டக்குப்பம், சின்னமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், புதுக்குப்பம் பகுதிகளில் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளின் தேவைகளை கேட்டு அறிந்தனர்.

 

அப்போது விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில் முதலில் தோப்புகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்கு பொக்லைன், டிப்பர்கள், இயந்திர வாள்கள் மற்றம் திறன்படைத்த தொழிலாளர்கள் தேவை என தெரிவித்தனர். மேலும் நீண்ட கால வட்டியில்லா கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கிட பரிந்துரை செய்திட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

 

விவசாயிகளிடம் நிபுணர்குழு தெரிவிக்கையில் முற்றிலும் பாதிப்படைந்த தென்னந்தோப்புகளில் நடவு செய்திட தென்னை மரங்களை அகற்றி புதிய கன்றுகள் அரசால் இலவசமாக வழங்கப்பட உள்ளது. உடன் நில சீர்திருத்தம் செய்து நடவு பணியினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தென்னையில் மகசூல் அளித்திட நான்கு ஆண்டுகள் ஆகும் எனவும் அதுவரையில் விவசாயிகள் ஊடுபயிராக இந்த பகுதிகளுக்கு ஏற்ற வாழை சாகுபடி செய்திடலாம் என்றும் இதனால் அதிக லாபம் பெறலாம் என்றும் தெரிவித்தனர்.

 

குறைந்த வயதுள்ள தென்னை மரங்கள் சாய்ந்திருந்தால் அவற்றை பொக்லைன் இயந்திரம்மூலம் நிமிர்த்து அருகிலேயே புதைத்து வைத்தால் சில மாதங்களில் வேர்ஊன்றி வளர்ந்து காய்ப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் இந்த தொழிற்நுட்பத்தினை பயன்படுத்திடலாம் என்றும் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் அன்பழகன், வானூர் வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடிஜெபக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

.

Advertisements