கோட்டகுப்பம் அருகே நைஜீரிய வாலிபர் கைது


புதுவையில் தங்கி இன்டெர்நெட் மூலம் வங்கி பாஸ்வேர்டை திருடி பல கோடி ரூபாயினை மோசடி செய்த நைஜீரிய வாலிபரை கொல்கத்தா போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

ஈ பேங்கிங் திருட்டு தொடர்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அம்மாநில போலீசில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்டவர் நைஜீரிய நாட்டை சேர்ந்த நிடுபுஷி நிகாடி என்கிற பெலிக்ஷோ டேவிட் என்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை கண்காணித்தபோது, அது ஆரோவில்லில் இருந்து இயங்குவது தெரியவந்தது.

 

இதனையடுத்து கொல்கத்தாவில் இருந்து வந்த மேற்கு வங்க போலீசார், கோட்டக்குப்பம் அருகே பெலிக்ஷோ டேவிட்டை கைது செய்து ஒதியஞ்சாலை காவல் நிலையம் கொண்டு வந்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெலிக்ஷோ கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார்.

 

அங்கு நடைபெறும் விசாரணைக்கு பின்னர், எந்தெந்த வங்கி கணக்கில் இருந்து பணம் களவாடப்பட்டது என்பது தெரியவரும். இருப்பினும், ஈ பேங்கிங் மோசடிமூலம் பல கோடி ரூபாயினை நைஜீரிய வாலிபர் லவட்டியிருப்பதாக மேற்கு வங்க போலீசார் நமது நிருபரிடம் தெரிவித்தனர்.

Advertisements