முஸ்லிம் லீக் ஏற்பாடு


தானே புயலால் கடும் பாதிப் பிற்குள்ளான கோட்டகுப்பம் மக்களின் நிவாரணத்திற்கு 1750கிலோ அரிசி, ஜெனரேட் டர் மூலம் குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் மாவட் டம் சார்பில் செயலாளர் ஹாஜி எஸ்.எம். அமீர் அப்பாஸ் வழங் கினார்.

 

அன்மையில் வீசிய கடும் புயலால் புதுச்சேரியை அடுத் துள்ள கோட்டகுப்பம் நிலை குலைந்து போயுள்ளது. பல்லா யிரக்கணக்கான தென்னை மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. ஏராளமான வீடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. ஒரு வார காலமாக குடிநீர் மின்சாரமின்றி அங்குள்ள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

 

இவர்களின் துயர் துடைக்க விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். அமீர் அப்பாஸ் கோட்டகுப்பத் தில் தானே புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 1750கிலோ அரிசி வழங்கினார்.

 

கோட்டகுப்பம் 8முதல் 13வது வார்டு வரையில் உள்ள முஸ்லிம் மற்றும் பிற சமுதாய மக்களுக்கும் இன்னும் அரசின் நிவாரண உதவிகள் கிடைக் காத நிலையில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் சார்பாக ஒவ் வொரு குடும்பத்துக்கும் 5கிலோ வீதம் 350 குடும்பங் களுக்கு இந்த அரிசி வழங்கப் பட்டது.

 

மேலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீரும், மின்சாரமும் மக்க ளின் அடிப்படை பயன்பாட்டிற் காக வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய ஜமாஅத் இளைஞரணி செயலா ளர் அப்துல் ஹக்கீம், ஆலோச கர் மௌலானா ஷாகுல் ஹமீது, மேலாளர் சகாயராஜ், கோட்ட குப்பம் ஜமாஅத் முத்தவல்லி இஹ்ஸானுல்லாஹ், இப்ராஹீம், இர்ஷாத் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

Advertisements