மின் கம்பம் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டம்


மின் கம்பம் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டம்

 

 

 

கோட்டக்குப்பம் பேரூராட்சியின் பல்வேறு வார்டுகளில் தானே புயலால் மின் கம்பங்கள் சாய்ந்தன. தற்காலிகமாக சில வார்டுகளில் மட்டுமே சாய்ந்த கம்பங்கள் மாற்றப்பட்டு சில பகுதிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பல தெருக்களில் இன்னும் சாய்ந்த மின் கம்பங்கள் மாற்றப்படவில்லை. இந்நிலையில் கோவையில் இருந்து மின் கம்பங்களை ஏற்றி வந்த லாரி கோட்டக்குப்பம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் மின் கம்பங்களை இறக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அதனை எடுக்கக்கூடாது என கூறினர். இதனால் லாரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் செய்தனர். கோட்டக்குப்பத்தில் மின் கம்பங்களை இறக்கி, தங்கள் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். அதன் பின்னர் லாரி புறப்பட்டுச் சென்றது.

Advertisements