கோட்டகுப்பம் மீனவர்கள் சாலை மறியல்


கோட்டகுப்பம் மீனவர்கள் சாலை மறியல்

 

நடுக்குப்பம், சோதனைக்குப்பம், கோட்டைமேடு, சின்ன கோட்டக்குப்பம் மீனவ கிராமங்கள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லையென கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்படவில்லை.

 

இதுபோன்ற சூழ்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் திங்கட்கிழமையன்று கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து விரைந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் வந்தால்தான் மறியலை கைவிடும் என மீனவர்கள் உறுதியாக இருந்ததால், வானூர் பகுதியில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

 

அப்போது அவர்களின் வாகனங்களை முற்றுகையிட்ட மீனவர்கள், புயல் பாதிப்பு குறித்து பார்வையிட வராததுடன், நிவாரணம் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து, சம்பந்தபட்ட அதிகாரிகள், மீனவ கிராமங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்குவார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Advertisements