கோட்டக்குப்பத்தில் தென்னை விவசாயிகள் வேதனை


கோட்டக்குப்பத்தில் தென்னை விவசாயிகள் வேதனை

படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும் 

 

கோட்டக்குப்பத்தில் , “தானே’ புயலின் சீற்றத்தால், ஏராளமான தென்னை மரங்கள் நாசமானது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோட்டகுப்பம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளியால், கோட்டகுப்பம் அடுத்த கோட்டைமேடு, புறதோப்பு, பகுதியில் பயிரிடப்பட்ட ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது.

 

கோட்டகுப்பம் அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த கோட்டகுப்பம் பகுதி சேர்ந்தவரின் பல நுறு ஏக்கர் தென்னை தோட்டம், சூறாவளி காற்றில் தரைமட்டமானது.கோட்டக்குப்பத்தில் இருந்த 75 சதவீதம் தென்னை மரங்கள் முறிந்தும், சாய்ந்தும் போனது. கோட்டகுப்பம் ஊரில் இருந்த தென்னை மரங்கள் முற்றிலுமாக முறிந்து விழுந்து விட்டன. பல  மாமரங்களும் வேறோடு சாய்ந்து விட்டன. இனிமேல் அந்த இடத்தை பிளாட் போட்டு விற்பதை தவிர விவசாயம் செய்ய வழியே இல்லை .

 

மேலும் ஒரு முறை புயல் பாதிப்பால் குருத்து விழுந்து விட்டால், மிண்டும் தென்னை வர இரண்டு முன்று வருடங்கள் வரை ஆகும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

 

பதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Advertisements