கடலோரப் பகுதிகளில் 1 லிட்டர் கூடுதலாக மண்ணெண்ணெய்


கடலோரப் பகுதிகளில் 1 லிட்டர் கூடுதலாக மண்ணெண்ணெய்

 

 

விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட வானூர் மற்றும் திண்டிவனம் கடலோரப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 1 லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று ஆட்சியர் கா.த.மணிமேகலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வானூர் மற்றும் திண்டிவனம் வட்டங்களின் கடலோரப் பகுதிகளிலுள்ள கிராம மக்களுக்கு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 லிட்டர் மண்ணெண்ணெய் பொதுவிநியோகத்திட்ட விலையிலேயே வழங்கிட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இதனை பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements