நில அதிர்வு? வதந்தி! நம்பவேண்டாம்


இன்று விடியற் காலை கோட்டக்குப்பத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரு ஆச்சம். நில நடுக்கம் ஏற்படபோவதாக கடலூர் பண்ருட்டி போன்ற பகுதிகளில் வந்த செய்திய வைத்து சிலர் வதந்தி பரப்பினர் . மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர் .இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

 

மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால், பொது மக்களுக்கு உண்மை நிலை அறிய வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் பெரும் பீதி அடைந்த மக்கள், சாலைகளில் குவிந்தனர்.இசெய்திய உறுதி செய்ய 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டபோது, இது வதந்தி என்று தெரிந்தது.

 

சில விசமிகள் செய்த சதியால் மக்கள் பெரிதும் பாதிகபட்டனர்.வானிலை ஆய்வு மையமோ அல்லது அதிகாரபூர்வ அமைப்புகள் எதுவுமோ தகவல் தராத நிலையில், பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்.

Advertisements