கோட்டகுப்பம் தானே புயல் சேதங்கள் : கணக்கெடுப்பு தொடங்கியது!


கோட்டகுப்பம் தானே புயல் சேதங்கள் : கணக்கெடுப்பு தொடங்கியது!

 

கோட்டகுப்பம் தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்களை உடனடியாக அகற்றவும், சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சரி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புயல் இழப்பு சேத மதிப்பீடுகளை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாக கோட்டகுப்பம் பகுதி முழுவதும் அரசு நிவாரணம் வழங்க அரசு அதிகாரிகள் கணக்கீடு பனி இன்று (01 /01 /2012 ) முதல் தொடங்கியது. பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட புயல் பாதிப்பை அதிகரிகளிடம் விளக்கமாக தெரிவிக்கவும். இந்த பனி முடிந்தவுடன் அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு நிவாரணம் கொடுக்கணும் என்று முடிவு எடுக்கும்.அதிகாரிகள் குழுவினர் சேதங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். 

Advertisements