குடிநீருக்காக ஆண்களும் பெண்களும் அலையும் அவலம் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


குடிநீருக்காக ஆண்களும் பெண்களும் அலையும் அவலம்

– ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் 

கோட்டகுப்பம் பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் குடிநீருக்கு பொது மக்கள் திண்டாடுகின்றனர். கோட்டக்குப்பத்தில் கோரதாண்டவம் ஆடிய தானே புயல், அனைத்து இடங்களிலும் மின்சார கம்பங்களை சரமாரியாக சாய்த்து விட்டது. மின்சார டிரான்ஸ்பார்மர்களும் புயலுக்கு தப்பவில்லை. கோட்டகுப்பம் முழுவதும்  பல  மின் கம்பங்களும்,  டிரான்ஸ்பார்மர்களும் சாய்ந்துள்ளதால் மின்சார வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, மரங்கள் நிறைந்த பகுதிகளில் மரங்களுக்கு இணையாக மின்சார கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும், தானே புயல் சூறையாடி விட்டது. எந்த தெருவுக்கு சென்றாலும் வழி எங்கும் சாய்ந்தும், நெளிந்தும், உடைந்தும் மின்சார கம்பங்கள் உருக்குலைந்து கிடப்பதை காண முடிக்கிறது. இதனால், அணைத்து பகுதிகளில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , புயல் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்பே மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, கடந்த மூன்று நாட்களாக கோட்டகுப்பம் சுற்றி உள்ள அணைத்து பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.

 

மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் கேள்விக் குறியாகி உள்ளது. ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தொட்டிகளில் நீரை ஏற்றி வினியோகம் செய்தாலும் போதுமான அளவிற்கு குடிநீர் கிடைப்பதில்லை. குறித்த நேரத்திலும், போதுமான அளவிலும் குடிநீர் வினியோகம் இல்லாததால் குடிநீரை தேடி பல  ஆண்களும் பெண்களும்  அலையும் அவலம் அரங்கேறி உள்ளது. எனவே, கோட்டகுப்பம் பகுதியில் மின்சார வினியோகத்தை சீரமைக்க, போர்க்கால அடிப்படையில் மின்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று பொது மக்கள் எதிர் பார்கிறார்கள்.

 

பாராட்டுகிறோம் …………

 

மேலும் நாட்டாண்மை தெருவில் இருக்கும் இளைநர்கள் முயற்சி எடுத்து ஜென ரேடார் மூலம் அணைத்து விடுகளுகும் தண்ணீர் ஏற்ற வழி வகை செய்தார்கள். இது போல் அணைத்து தெரு  இளைநர்கள் செய்தால் குடி  தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு தற்காலிக விமோர்சனம் கிடைக்கும்.

Advertisements