நன்றி என்றென்றும்


நன்றி என்றென்றும் ………………

இவ்வளவு குறுகிய காலத்தில் நமது இணையத்தளம் ஒரு லட்சம் மேற்பட்ட பார்வையாளர்கள்  பார்த்துள்ளனர்.  யாருக்கும் பயபடாமல்,  செய்திகளை உண்மை தன்மையுடன்,  மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நாம் இருப்பது உங்களுக்கு நன்கு தெரியும். செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு கொடுக்கும் நோக்கத்துடன் வெளியிட்ட செய்திகள்,  சில நேரங்களில் பொது மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியது. உண்மை அறிந்து உடனே நாம் திருத்தி கொண்டோம். இது தான் நாம் மீது நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை. மேலும் நமது இணையத்தளத்தில் அணைத்து  பார்வையாளர்களின்  கருத்துகளும் மதிப்பு கொடுத்து பிரசிப்போம். அது எங்களை சாடி வந்தாலும்  பிரசிப்போம். 

 

இந்த வெற்றிக்கு உண்மையான பங்காளர்கள் கோட்டகுப்பம் FIVE STAR  நற்பணி மன்றத்து தோழர்கள் தான். அவர்கள் தமது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் நமதூரில் நடக்கும் விடயம் வெளிநாட்டில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பு தான். அவர்களுக்கு எங்களின் நன்றிகள்.

 

ஒரு லட்சம் மேற்பட்ட ஹிட்ஸுகளையும்,300 க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் எமது இணையதளத்தின் பார்வையாளர்களுக்கு ,செய்திகளை உடனுக்குடன்   அனுப்பும் நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி.

Advertisements