தானே புயல் தாக்கிய சோகம்


 வங்க கடலோரத்தில் மையம் கொண்டுள்ள “தானே’ புயல் இன்று காலையில் கரையை கடந்தது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடந்த போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. தானே ஏற்பதுத்திய சேதங்கள்.


படங்களை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும் 

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் மனைவி சுகந்தி(24). நேற்று முன்தினம் இரவு இவர், கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது, புயல் காரணமாக புளிய மரம் வேரோடு சாய்ந்து சுகந்தியின் வீட்டின் மீது விழுந்தது.

இதில், படுகாயமடைந்த சுகந்தி அதே இடத்தில் இறந்தார். அவரது தயார் வள்ளிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர், புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், அதே பகுதியில் 20க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட நபர்கள், அரசு சார்பில் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

கோட்டகுப்பம் பேரூராட்சி பகுதிகளில் புயலால் நேற்று முன்தினம் இரவு முதல் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் முலம் பொதுமக்களுக்கு பள்ளிவாசலில் குடிநீர் விநியோகிகபடுகிறது .

சின்னமுதலியார்சாவடி, சந்திராயன்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை விழுப்புரம் கலெக்டர் மணிமேகலை, புயல் நிவாரண சிறப்பு அதிகாரி பழனிசாமி, வானூர் தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் அதிகாரிகள் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

Advertisements