தானே தாக்குதல் அபயம்: அதிகாரிகள் அலேர்ட்


தானே புயல் நாகப்பட்டினத்துக்கும், சென்னைக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயலானது, இரு நகரங்களிலிருந்தும் 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. புயல் நெருங்கியதைத் சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 30ம்தேதி அதிகாலையில் இது கரையைக் கடக்கும் என்பதாலும், இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

தானே புயல் கரையை கடக்கும் போது பலவீனம் ஆவதற்கான அறிகுறிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் புயல் தாக்கும் போது பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுவது நல் லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கடல் அலைகள் பல மீட்டர்உயரத்துக்கு எழுந்து சீறி பாய்ந்து வரும் என்ப தால் மீன்பிடி படகுகளை பாதுகாத்துக் கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. சூறை காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் பட்சத்தில் எங்கும் வெள்ளக்காடாகி விடும். தகவல் தொடர்பும், மின்இணைப்பும் துண்டிக்கப் பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

 

தானே புயல் தமிழக கடற்கரையை நெருங்க, நெருங்க சூறைக்காற்று வேகம் அதிகரிக்கும். இன்றிரவு சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருக் கும். கூரை வீடுகள், மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், மரங்கள், பாதிக்கப்படலாம். இதை கருத்தில் கொண்டு மக்கள் இன்றிரவு மிக, மிக உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

காற்றின் வேகம் 135 கி.மீ. வரை கூட இருக்கலாம். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் மழை 200 மி.மீ. அளவு வரை பெய்யலாம் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி கிராமத்தில் நேற்று இரவு கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த தம்பிகண்ணன், முத்துகிருஷ்ணன் ஆகியோரது மாடி வீடுகள் உள்பட 5 வீடுகள் இடிந்து விழுந்தன.

 

வீடுகள் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் விடிய, விடிய தூங்காமல் ரோட்டில் அமர்ந்து இருந்தனர். மேலும் சிலர் சுனாமி பீதியிலும் அச்சத்துடன் இருந்தனர்.

 

கடல்நீர் ஊருக்குள் புகுந்து 5 வீடுகள் இடிந்து விழுந்ததை அறிந்த வானூர் தாசில்தார் முத்துலட்சுமி நேரில் வந்து பார்வையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு கலெக்டர் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisements