உள்ளாட்சி தேர்தல் வாக்குறுதி – FOLLOW UP


உள்ளாட்சி தேர்தல் வாக்குறுதி – FOLLOW UP

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நமது இணையத்தளத்தில் கோட்டகுப்பம் புது பேரூராட்சி தலைவர் ஊராட்சி தேர்தலில் போது கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ? என்று நாம் கேட்டு இருந்தது உங்களுக்கு தெரியும். பின்னர் பேரூராட்சி தலைவர் தரப்பு நமக்கு அது சம்மந்தமாக சில விளக்கம் கொடுத்தனர். அதன் விபரம் வருமாறு. நமது அறிவிப்பு வந்தவுடன் பேரூராட்சி தலைவர் சென்னை சென்று பல அமைச்சரின் அலுவலகத்தில் நேரில் சென்று மனு கொடுத்து வந்துள்ளார்கள். மேலும் கிழ் கண்ட விளக்கமும் தந்துள்ளார்கள்.

நமது கோரிக்கையும் அதன் விளக்கமும் ( சிகப்பு நிறத்தில் இருப்பது)

  •  நிரந்தர மின்தடையை போக்க கோட்டக்குப்பத்தில் துணை மின்நிலையம்…. இது சமந்தமாக மின் துறை அமைச்சர் அவர்கள் கோட்டகுப்பம் அடுத்துள்ள பொம்மையார் பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்க இடம் பார்த்து இருபதாகவும், கூடிய விரைவில் அங்கு பனி துவங்கும் என்று உறுதியுடன் கூறினார்.


  • கோட்டக்குப்பம் பகுதியில் படுக்கை அறையுடன் கூடிய புதிய ஆரம்ப சுகாதார நிலையம்…இது சமந்தமாக சுகாதார துறை அமைச்சரின் அலுவலகத்தில் மனு கொடுத்து வந்துள்ளனர், நல்ல இடம் கிடைத்த உடன் புதிய சுகாதார நிலையம் நமது ஊர்க்கு வரும்.


  • புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து சுத்தமான, சுவையான குடிநீர்…..

  • அணைத்து தெருக்களுக்கு  சாக்கடை வசதி …..

  • அணைத்து தெருக்களுக்கு சோடியம் விளக்குடன் கூடிய மின்கம்பம் …….

  • சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்கா…….

  • கடல் அரிப்பை தடுக்க பலம் வாய்ந்த தடுப்பு சுவர்.

  • அணைத்து தெருக்களுக்கும் குப்பை தொட்டி…….., இதற்கு உள்ளாட்சி அமைச்சரின் அலுவலகத்தில் இதற்கு மனு கொடுத்து இருகிறார்கள்.  விரைவில் இந்த பணிகள் துவங்கும்.மேலும் அணைத்து தெருக்களும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படம் என்று உறுதி கூறினர்.


    «பார்போம் இந்த வேலை எவ்வளவு சீக்கிரத்தில் முடியும் என்று !!!»

Advertisements