அரசுகளின் புரிந்துணர்வு இல்லாமல் கிடப்பில் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை


தமிழக புதுவை அரசுகளின் புரிந்துணர்வு இல்லாமல்

கிடப்பில் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை, அதன் முழு பயனும் இன்னும் அடையாமல் தள்ளி போகின்றது. புதுவை சென்னை கிழக்கு கடற்கரை சாலை தமிழக மற்றும் புதுவை அரசுகளின் கனவு திட்டம். சென்னையில் இருந்து துவங்கும் இந்த சாலை, கடற்கரை ஓர ஊர்களை அனைத்தையும் ஒரு சாலையின் ஓரத்தில் அழகாக இணைத்து சாதனை படைத்தது. இந்த சாலையில் பயணிக்கும் பயணிகள் அழகான வங்காள வரிகுடவை ரசித்து பயணிப்பார்கள்.

இந்த அழகான பயணம் கோட்டகுப்பம் வரும் வரை தான், அதன் பிறகு துவங்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நொந்தவர்கள் ஏராளம். இதற்கு ஒரு மாற்று ஏற்பாடாக கோட்டகுப்பம் புறதோப்பில் இருந்து புதுவை கருவடிகுப்பதை இணைக்கும் திட்டம். பல நுறு கோடிகளை கல்லாகவும் மண்ணாகவும் கொட்டி உருவாகும் இந்த இணைப்பு சாலை பனி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதை பற்றி நாம் பல கட்டுரைகளை இங்கே பதிந்து இருக்கிறோம்.

கிழக்கு கடற்கரை சாலை – அதிகாரிகள் கவனிப்பார்களா

கோட்டக்குப்பம் – கருவடிக்குப்பம் பை பாஸ் சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்

கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் – ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்பார்ப்பு

புதுவை அரசு கருவடிகுப்பதில் சாலை அமைக்கும் பணியும் முடிந்து, சோடியம் விளக்கு எல்லாம் போட்டு காத்து இருகிறார்கள், மேலும் பனி முடிந்து பல ஆண்டுகள் ஆனதால் அந்த பகுதி புதார் முளைத்து உள்ளது. நமது கோட்டகுப்பம் பகுதியில் தமிழக அரசு அதன் போக்கில் பனி செய்து வருகிறார்கள்.

என்று முடியும் இந்த இணைப்பு சாலை பனி என்று அந்த இனிய நாளை பொதுமக்களுடன் சேர்ந்து நாமும் ஆவலுடன் எதிர்நோக்க காத்து இருக்கிறோம்.

படங்களை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

Advertisements