மழையால் ரோடுகள் மோசம்


மழையால் ரோடுகள் மோசம்

கோட்டகுப்பம் மெயின் ரோடு மழையினால் மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும் மழையினால் ரோட்டருகில் ஏற்பட்டுள்ள திடீர்பள்ளத்தை சரிசெய்து வாகன ஓட்டிகளின் அச் சத்தை போக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இந்த வழியாக தான் புதுவை பல்கலைகழகம், மற்றும் பொறியல் கல்லூரி போக மாணவ மாணவியர் பயன்படுத்துகிறார்கள். மேலும் புதுவை சென்னை பிரதான சாலையும் இது தான். ஆரோவில் வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோடு கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் கடுமையான சேதம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைநீர் தேங்கியதால் ரோட்டருகில் திடீர்பள்ளம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இந்த ரோடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மழையினால் ரோட்டருகில் ஏற்பட்டுள்ள திடீர்பள்ளத்தை சரிசெய்து வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

20111212-114142.jpg

20111212-114213.jpg

20111212-114244.jpg

Advertisements