ஹஜ்ஜுக்கு விண்ணப்பிக்கும்போதே பாஸ்போர்ட் அவசியம்!!


2012ஆம் ஆண்டுக்கான ஹஜ் அறிவிப்பு பிப்ரவரி மாதம்!

ஹஜ்ஜுக்கு விண்ணப்பிக்கும்போதே பாஸ்போர்ட் அவசியம்!!

2012 ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்ட் இல்லாமல் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. இது குறித்து இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- 

2012 ஆம் ஆண்டு முதல் – இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் செய்பவர்கள் = விண்ணப்பம் செய்யும்போதே – பாஸ்போர்ட் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும். இது சிறுவர் மற்றும் கைக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.

ஹஜ் விண்ணப்பம் சமர்பிக்கும் போதே – பாஸ்போர்ட்டும் (அசல்) இணைத்து சமர்பிக்கப்பட வேண்டும். ஆகவே வரும் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள நாடியுள்ளோர் – உடனடியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்து தயார் நிலையில் இருக்கும் படி கேட்டுகொள்கிறோம். 2012 ஆம் ஆண்டுக்கான ஹஜ் அறிவிப்பு பிப்ரவரி மாதம் வாக்கில் வெளிவரும்.

மேலும் – தங்களின் பாஸ்போர்ட் – குறைந்தது மார்ச் 31, 2013 வரை செல்லுப்படியானதாக இருக்கவேண்டும்.

Advertisements