பாருங்கள் இதையெல்லாம்!


 

கர்ப்புறங்களில் இடம் வாங்க முடியாதவர் களின் அடுத்த டார்கெட்டாக இருக்கிறது பஞ்சாயத்து அப்ரூவல் மனைகள். பஞ்சாயத்து அப்ரூவல் பெற்ற இடங்களை வாங்கும் போது என்னென்ன விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

 

குறிப்பிட்ட இடத்தில் மனை அமைப்பதற்குத் தடையில்லை என ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

கிராம நிர்வாக அதிகாரி வசம் இருக்கும் சிட்டா, அடங்கல் பதிவேடுகளின் உண்மையான உரிமையாளர் யார் என்கிற விவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தது 45 வருடங்கள் வில்லங்கம் பார்ப்பது நல்லது.

மனைக்குச் செல்ல பாதை வசதி இருக்க வேண்டும். பிற்காலத்தில் சாலை வந்துவிடும் என்று கொடுக்கப்படுகிற வாக்குறுதிகளை நம்பி வாங்க வேண்டாம். வேறொருவருக்குச் சொந்தமான இடத்தின் வழிதான் மனைக்குச் செல்ல வேண்டும் என்றால் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது.

பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளில் பூங்கா, சமுதாயக் கூடம், கடைகள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மனைப் பிரிவில் வாங்கினால், பிற்காலத்தில் உள்கட்டமைப்பு வேகமாக வளரும்.

பொதுவாக சாலை 23 அடிக்கு மேல் இருந்தால் நல்லது. இந்த சாலை உள்ளாட்சி அமைப்புக்குச் சொந்தம் என்பது எழுதி ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் மின்சாரம், குடிநீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவார்கள்.

மனையின் அளவு, நான்கு எல்லைகளை பத்திரப் பதிவுக்கு முன் சரி பார்ப்பது அவசியம். குறைந்தபட்சம் 1,200 ச.அடி இருந்தால் கட்டட அனுமதி வாங்க ஏதுவாக இருக்கும்.

பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை வாங்க வங்கிக் கடன் கிடைப்பது கஷ்டம். ஆனால், கட்டட அனுமதி பெற்று வீட்டுக் கடன் வாங்குவது சுலபம்.

பஞ்சாயத்து அப்ரூவல் என்பது, குறிப்பிட்ட இடத்தில் வீட்டு மனை அமைக்க ஆட்சேபனை இல்லை என உள்ளாட்சி அமைப்பு அளிக்கும் அனுமதி மட்டுமே. ஆனால், புரமோட்டர் விதிமுறைகள்படி சாலையின் அகலம், மனையின் அளவு மற்றும் பொது இடங்களை உள்ளாட்சி அமைப்புக்கு ஒப்படைத்திருந்தால் மட்டுமே பின்னர் வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்கும்.