கோட்டகுப்பம் நிலத்தின் மதிப்பு உயர்த்தப்பட்ட அட்டவணை


கோட்டகுப்பம் நிலத்தின்  மதிப்பு உயர்த்தப்பட்ட அட்டவணை

ஒரு சிறு  உதாரணம்.

முன்பு பள்ளிவாசல் தெருவில் இருக்கும் 1200 சதுர அடி 

 பிளாட் அரசு விதித்த மதிப்பு ருபாய் 2,88,000 

அதே பிளாட்  இன்றைய அரசு மதிப்பு

உயர்த்தப்பட்ட விலை ருபாய் 15,00,0000 

இதன் முலம் நாம் பத்திர பதிவின் போது அதிக விலைக்கு பத்திரம் எழுத வேண்டிவரும். மேலும் பல தெருக்களை வியாபாரம் தலமாக அறிவித்ததன் முலம் மின்சார கட்டணம் மற்றும் விட்டு வரி கூட அதிகமாக கட்டவேண்டி வரும். 

அரசு ஒரு இடத்தின் விலை, அந்த தெருவில் இருக்கும் அடிப்படை வசதி போன்ற விஷயத்தை கணக்கில் கொண்டு அளவிடும், ஆனால் இப்பொது அடிப்படை வசதி கொஞ்சம் கூட இல்லாத அணைகுடியார் தெரு, மோர்சர் தெரு, காஜியார் தெரு போல பல தெருக்களின் நிலத்தின் மதிப்பை தாறு மாறாக உயர்த்தி உள்ளனர்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், கோட்டகுப்பத்தின் வியாபார தலமான கோயில் மேட்டை குடியிருப்பு பகுதியாக அறிவித்து விட்டு,  ஒரு பொட்டிகடை கூட இல்லாத அணைகுடியார் தெருவை  வியாபார தலமாக அரசு அறிவித்து உள்ளது.

இது போல் பல குளறுபடி செய்து அரசு அதிகாரிகள் யாரை

திருப்தி படுத்த என்று அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ?

Advertisements