தவ்ஹித் சகோதர்களின் பிரச்சாரமா ? பிரச்சனையா ?


தவ்ஹித் சகோதர்களின் பிரச்சாரமா ? பிரச்சனையா ?

(பழைய பட்டின பதை பட்டினத்தார் தெரு ரஹ்மானிய மஸ்ஜித் முன்பு நடைபெற்ற தெரு முனை பிரசாரம் )

இன்று 13/1/2011 கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜமாஅத் சகோதரர்கள் தங்களின் இயக்கத்தின் சார்பில் தெரு முனை பிரசாரம் நடைபெற்றது.  அதில் அவர்கள் சுன்னத் ஜமாஅத் பின்பற்றும் முறைகளை தவறு என்று தங்கள் தரப்பு நியாயத்தை சொன்னார்கள்.இதை தேவை இல்லாமல் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு நின்று கொண்டு சுன்னத் ஜாமத்தை பின் பற்றுபவர்களை பற்றி தரைக்குறைவாக  விமர்சனம் செய்வது கோட்டக்குப்பத்தில் நிலவி வரும் அமைதியை கெடுக்கும் .  அவர்களின் கருத்துகளை பொது மக்கள் முன்பு வைக்க எல்லா விதத்திலும் உரிமை உள்ளது, அதை பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பிரசாரம் செய்தல் மக்களுக்கும் பயன்படும். அதை விடுத்து சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு செய்வது, வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம். இதை பயன் படுத்தி சமுக விரோதிகள் நமதூரில் பிரச்னை கிளப்ப பார்ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்து இருக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Advertisements