108 ஆம்புலன்ஸ் பணிக்கு நேர்காணல்


அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர்கள் பணிக்கான நேர்காணல் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள எம்கே மகாலில் வருகிற 4ம் தேதி நடக்கிறது.

 

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். மருத்துவ உதவி பணியாளர் பணிக்கு பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் பயிற்சி இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

28&30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட அனுபவத்துடன் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதுக்கு மேல் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், 162.5 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

 

டிரைவர் பணிக்கு ஆண்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும். உதவியாளருக்கு ரூ.7,250, டிரைவருக்கு ரூ.6,600 ஊதியம் வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் கல்வி மற்றும் ஓட்டுனர் உரிமம், அனுபவ சான்று ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். வெளியூர்களில் இருந்து நேர்காணலுக்கு வரும் நபர்களுக்கு பயணப்படி வழங்கப்படாது.

Advertisements