மின் தடையால் பாதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்திலிருந்து பட்டானூர், கோட்டக்குப்பம், பூத்துறை, ஆரோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் தினசரி 2 மணி நேரம் அறிவிப்பு கொடுத்து மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.

இதை தவிர்த்து அடிக் கடி காலை நேரங்களில் அறிவிப்பின்றி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தினமும் 3 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.

இதனால் வியாபாரம், தொழில் பாதிக்கப்படுகிறது. இதேபோல் வானூரிலும் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆகவே இப்பகுதிகளில் அறிவிப்பு கொடுத்த நேரம் போக மீதி நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisements