கோட்டக்குப்பம் பேரூராட்சி துணை தலைவர் சாந்தா தேர்வு


கோட்டக்குப்பம் பேரூராட்சி துணை தலைவர் சாந்தா தேர்வு

கோட்டக்குப்பம் பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., கவுன்சிலர் சாந்தாகணேசன் வெற்றி பெற்றார். கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவராக ரபியத்துல் பசிரியா, உறுப்பினர்களாக கோவிந்தன், தேவராஜ், சாந்தா, பிரகாஷ், இளங்கோ, ஜெயா, தேசப்பன், நஜீர், ரெமிலா பேகம், ஆமீனா பேகம், நமீமா பானு, அன்சாரி, ஜோதி, பார்த்திபன், சரவணன், வரதன், ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபாகரன் முன்னிலையில் நேற்று நடந்தது. அ.தி.மு.க.,சார்பில் 3-வது வார்டு கவுன்சிலர் சாந்தா கணேசன், முஸ்லிம் லீக் சார்பில் 10-வது வார்டு கவுன்சிலர் ஆமீனா பேகம் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.,போட்டியிடவில்லை. கடைசி நேரத்தில் தே.மு.தி.க., வும் விலகிக் கொண்டது. இதில் 12 ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர் சாந்தா கணேசன் வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட முஸ்லிம் லீக் கவுன்சிலருக்கு 7 ஓட்டுகள் பெற்றார்.

கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியை சுயேச்சைகள் ஆதரவுடன் அ.தி.மு.க., கைப்பற்றியதால், தொண்டர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஓட்டெடுப்பையொட்டி கோட்டக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.தேர்தல் ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் ஜேம்ஸ், எழுத்தர் சுகுமாறன், வரி தண்டாளர்கள் சங்கர், சிவாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisements