பண மழை பொழிந்த தேர்தல் முடிந்தது!!!!!


பண மழை பொழிந்தது !!!

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் கொடுக்கும் பணம் மற்றும் அன்பளிப்பால் கோட்டகுப்பம் வாக்காளர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.வழக்கமான தேர்தலைப் போல் அல்லாமல் கூட்டணியின்றி அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு தன் உண்மையான பலத்தை நிரூபித்து காட்டும் தேர்தல் ஆகும். அதனால் ஒவ்வொரு பதவிக்கும் ஏராளமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.உள்ளாட்சித் தேர்தல் என்பதால் பிரதான கட்சிகளின் தலைமை, தேர்தல் செலவுக்காக ஒரு பகுதி தொகையை வழங்கியுள்ளது. இருப்பினும் வேட்பாளர்கள் “வருவாய்’ பெருக்கக்கூடிய பதவி என்பதால் சொந்த காசை செலவு செய்யத் துவங்கியுள்ளனர்.வாக்காளர்கள் யார் கொடுப்பதை வாங்குவது என திக்குமுக்காடிப் போயுள்ளனர். வாங்காமல் விட்டு விட்டால் அந்த கட்சிக்கு எதிரியாகி விடுவோமா என அச்சமடைந்துள்ளனர்.

கோட்டகுப்பம் வாக்களர்களுக்கு எந்த தேர்தலில் இல்லாத வகையில் இந்த உள்ளாட்சி தேர்தலில் பணம் மற்றும் பரிசு மழை பொழிந்தது. தேர்தலுக்கு முன் இரவில் பலரது விட்டை அதிஷ்டம் கதவை தட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்தனர். வேட்பாளர் வசதி பொறுத்து ரூபாய் 200, 100 என்று கொடுத்தனர். மேலும் பெண்களுக்கு புடவை, தண்ணீர் ஜக்கு என வாரி வழங்கினர். தேர்தல் அன்று காலையில் பலரது விட்டு வாசலில் இரண்டு பாக்கெட் பால் வைத்து விட்டு சென்றனர்.மேலும் பாரம்பரிய மிக்க பரோட்டா டோக்கன் பலருக்கு வழங்கப்பட்டது. சிலர் ஒருவரிடம் பணம் வாங்கியதால் எதிர் தரப்பிடம் வேண்டாமென மறுத்தாலும் அவர்களின் சட்டை பாக்கெட்டுகளில் உரிமையோடு பணத்தை திணித்து விட்டுச் செல்லும் வேட்பாளர்களால் வாக்காளர்கள் குஷியடைந்துள்ளனர்.இது போல் வெளிபடையாக நடப்பது கோட்டக்குப்பத்தில் புதுசாக இருந்தாலும், பணம் கொடுத்தவர்கள் ஜெயித்தால் அந்த பணத்தை எப்படி சம்பாதிப்பார்கள் என்று சிந்திக்கவும். வாழ்க ஜனநாயகம்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. பெரிய அசம்பாவித, வன்முறைச் சம்பவங்கள் எதுவும் எழவில்லை. ஆங்காங்கு சிறிய அளவிலான கலாட்டாக்கள் உள்ளிட்டவை நடந்துள்ளன. 78 சதவீதமும்ஓட்டுகள் பதிவானது. வரும் 21ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

Advertisements