பாய் ஒட்டு போடா மறக்காதிங்க ?


பாய் ஒட்டு போடா மறக்காதிங்க ?

கோட்டகுப்பம் பேரூராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 96 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் போட்டி அதிகரித்துள்ளது. சில வார்டுகளில் 11 முனை போட்டி நிலவிவருகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவிட்ட நிலையில் வாக்குப் பதிவிற்காக வாக்குச் சாவடிகள் ஆயத்தமாகி வருகின்றன.

பேரூராட்சித் தலைவர் வேட்பாளர்கள் 7 பேர் போட்டியிட்டாலும் 3 வேட்பாளர்களுக்கு மத்தியில்தான் பிரதான போட்டி நிலவுகிறது. ஆனால் வார்டு உறுப்பினர் வேட்பாளர்களைப் பொருத்தவரை பல வார்டுகளில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 1 வது வார்டுகளில் 11 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோன்று பல வார்டுகளில் வேட்பாளர்களும் அதிகபட்சமாக தேர்தல் களத்தில் உள்ளனர்.

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகம்பேர் வாக்களர்கள் பலருக்கு வேண்டப்பட்டவர்களாகவும், நன்கு தெரிந்தவர்களாகவும் உள்ள நிலையில் யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழப்பத்திலேயே உள்ளனர். சில வேட்பாளர்கள் தங்களக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்று அறிந்திருந்தும்கூட களத்தில் இருப்பதால் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசங்களுக்கு சோதனையாக உள்ளனர்.

என்னதான் குழப்பமான நிலை இருந்தாலும் திரு.வாக்காளர் யாருக்கு வாக்களிக்கப்போகிறேன் என்கிற கருத்துக் கணிப்புக்கெல்லாம் மசியாமல், தெளிவாகவே உள்ளார்.பல இடத்தில ஒட்டு வேட்டை நடைபெறுகிறது, டீ கடை, பள்ளிவாசல், தெருமுனைகள் என எங்கும் வேட்பாளர்களின் அன்பு தொல்லை தொடர்கிறது, நாளை மலை வரை வாக்காளர் தான் மன்னர்கள்.

Advertisements