திமுக வேட்பாளர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பு


கோட்டக்குப்பம் 16 வது வார்டு திமுக

வேட்பாளர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோட்டக்குப்பம் பேரூராட்சி 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். இவர், நேற்று சின்ன கோட்டக்குப்பம் மெயின்ரோடு, எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அப்பகுதி வாக்காளர்களிடம் அவர் கூறியதாவது:

நான் மீண்டும் வெற்றி பெற்றால் சின்ன கோட்டக்குப்பம் 16வது வார்டில் பொதுகழிவறை வசதி ஏற்படுத்தி தரப்படும். 16 வது வார்டில் தனி ரேஷன்கடை அமைத்து தரப்படும். நிரந்தர மின்தடையை போக்க கோட்டக்குப்பத்தில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 16வது வார்டில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் குப்பை தொட்டி அமைத்து தரப்படும். அனைத்து தெருக்களுக்கும் தெரு பெயர் பலகை அமைத்து தரப்படும். 10ம்வகுப்பு மற்றும் மேல்படிப்பு படித்தவர்களுக்கு திருமண உதவி திட்டம் பெற்றுத்தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கூறினார்.

பிரசாரத்தின்போது திமுக நிர்வாகிகள் அய்யனார், மாறன், கருணாமூர்த்தி, செல்லப்பன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Advertisements