மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஆசிபா பேகம் தீவிர ஓட்டு வேட்டை


மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஆசிபா பேகம் தீவிர ஓட்டு வேட்டை


கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆசிபா பேகம் போட்டியிடுகிறார். அவர், நேற்று பெரிய முதலியார்சாவடி, சின்னமுதலியார் சாவடி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று பஸ்’ சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் கூறியதாவது:

நான் வெற்றி பெற்றால் கோட்டக்குப்பம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம் அமைத்து தரப்படும். ஆழ்துளை கிணறுகள் அமைத்து சுத்தமான, சுவையான குடிநீர் வழங்கப்படும். கோட்டக்குப்பம் பகுதியில் சாக்கடை வசதி செய்து செய்து தரப்படும். மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஏற்படுத்தி தரப்படும்.

எழுத்தறிவு பெற்றவர்களை 100 சதவீதமாக உயர்த்திட இரவு பாடசாலை அமைக்கப்படும். இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகத்தை விரிவாக்கம் செய்வேன். கோட்டக்குப்பம் பகுதியில் சுனாமி, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பேரிடர் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். மீனவ மக்களுக்கு மீன் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு அமைத்து தரப்படும்.

கடற்கரையோரத்தில் சோடியம் விளக்குடன் சாலை அமைத்து நடைபயிற்சிக்கும், சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்காவும் அமைத்து தரப்படும்’ என்றார்.பிரசாரத்தில் மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி, மாவட்ட துணை செயலாளர்கள் முபீன், அஜ்மல், நகர தலைவர் சம்சுதீன், நகர செயலாளர்கள் சாதிக், முகமது அலி, 13வது வார்டு வேட்பாளர் அஷ்ரப் அலி உள்பட 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Advertisements