தேமுதிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு


கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர் பதவி

தேமுதிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

 

கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேமுதிக சார்பில் சாமீராபானு போட்டியிடுகிறார். இவர் கோட்டகுப்பம் பழையபட்டினம் பாதை, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன கோட்டகுப்பம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று �முரசு’ சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தான் வெற்றி பெற்றால் கோட்டக்குப்பம் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து வார்டுகளிலும் சுத்தமான குடிநீர் வசதி ஏற் படுத்தி தரப்படும். மக்களின் பிரச்னைகளை தீர்க்க பேரூராட்சி அலுவலகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்படும். மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் ஹைமாஸ் விளக்கு, சிமென்ட் சாலை அமைக்கப்படும். கோட்டக்குப்பம் பகுதியில் 108ஆம்புலன்ஸ் சேவை ஏற் படுத்தி தரப்படும். 10 படுக்கையறையுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரப்படும்.

பெரிய முதலியார் சாவடி கடற்கரையில் விளையாட்டு பூங்கா மற்றும் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதியிடம் சிறந்த தலைவருக்கான விருதை வாங்குவேன் என்றார்.

பிரசாரத்தில் தேமுதிக நகர செயலாளர் முகமது சாதிக், 13வது வார்டு வேட்பாளர் பாபு அன்சாரி, நகர துணை செயலாளர்கள் கமல்பாட்ஷா, சித்திக் பாட்ஷா மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Advertisements