கோட்டக்குப்பத்தில் வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறை கூட்டம்


கோட்டக்குப்பத்தில் வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறை கூட்டம்

தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களிடம் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கோட்டக் குப்பம் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறை கூட்டம் கோட்டக்குப்பத்தில் நடந்தது. பேரூராட்சி அலுவலர் பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பேரூராட்சி அலுவலர் பிரபாகரன் பேசுகையில், வேட்பாளர்கள் அவர்களது பிரசார நோட்டீஸ்களை வாக்காளர்களிடம் அளிக்க வேண்டும். நோட்டீஸ் மற்றும் போஸ்டர்களை எங்கேயும் ஓட்டுதல் கூடாது. டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும், என்றார்.

உதவி தேர்தல் அலுவலர் குமார், தேமுதிக நகர செயலாளர் முகமது சாதிக், திமுக வேட்பாளர் பாலஅம்பிகை தட்சிணாமூர்த்தி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, அதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements