கோட்டக்குப்பத்தில் மையத் அடக்கம் செய்வதில் தகராறு


கோட்டக்குப்பத்தில் மையத் அடக்கம் செய்வதில் தகராறு


கோட்டக்குப்பம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் தலைவராக இருப்பவர் ஷாபூதீன். இவரது தாயார் ஜூலாபீ(75). நேற்று முன் தினம் இரவு இறந்தார். தமிழ்நாடு தவுஹீத் ஜமாத் மூலமாக அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதற்கு, கோட்டக்குப்பம் சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அடக்கம் செய்ய இடம் தர மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், இருதரப்பினரையும் கோட்டக்குப்பம் காவல்நிலையத்துக்கு அழைத்து போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். வானூர் தாசில் தார் முத்துலட்சுமி, கோட்டக்குப்பம் டிஎஸ்பி முரு கேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் இருதரப்பு முஸ்லிம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுன்னத் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகை யில், `கடந்த 400 ஆண்டுகளாக முன்னோர்கள் செய்து வந்த வழிமுறை களை கடைபிடித்து வருகிறோம். ஆனால் இவர்கள், புதிய முறையில் அடக்கம் செய்வதாக கூறுகிறார்கள். இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்� என்றனர்.ஆனால், தவ்ஹீத் ஜமாத் தரப்பினரோ, `நாங்கள் நபி கள் வழியில் தொழுகை நடத்திதான் அடக்கம் செய் கிறோம். புனித குரா னி லேயே இது சொல்லப்பட்டுள்ளது என்றனர். இத னால் இருதரப்பினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முறையில் நபிகள் வழியில் அடக்கம் செய்வதற்கு இருதரப்பின ரும் ஏற்றுக் கொண் டதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் கோட்டக்குப்பத் தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தி இன்று 04/10/2011 தினகரன் நாளிதழில் புதுச்சேரி பதிப்பில் வந்தது.

நன்றி தினகரன் புகைப்படம் மற்றும் செய்தி உதவிக்கு.

Advertisements