ஜெயிக்க போவது யாரு ?


கோட்டகுப்பம் பேரூராட்சி தலைவர்

பதவிக்கு ஜெயிக்க போவது யாரு ?

  1. திமுக சார்பில் தட்சணாமூர்த்தி மனைவி பாலாம்பிகை.

  2. முஸ்லிம் லீக் சார்பில் அன்வர் பாஷா அவர்களின் சகோதரி பாத்திமா தெளலத்.

  3. அதிமுக சார்பில் அமீருத்தீன் அவர்களின் மனைவி மெஹராஜ் பேகம்

  4. தேமுதிக சார்பில் சாதிக் பாஷா அவர்களின் மனைவி சமீரா பானு.

  5. மமக சார்பில் ரஜ்ஜாக் அவர்களின் மனைவி ஆசிபா பேகம்.

  6.  சுயேட்சையாக ஜாபர் அலி அவர்களின் மனைவி சூரியா பேகம்.

  7. சுயேட்சையாக அப்துல் ஹமீது அவர்களின் மகள் ராபியத்துல் பஷீரியா.

தற்போது நிகழும் ஏழுமுனை போட்டியில்  சிந்திபவர்கள் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது.

நமதூரில் ஆறு வேட்பார்கள் களமிறங்கி உள்ளார்கள். இவர்கள் நமது முஸ்லிம் வாக்குகளை

ஆறு பிரிவாக பிரிப்பார்கள், மேலும் நமதுரை சார்ந்த தி மு க அனுதாபிகள் அவர்கள் கட்சி

ஆட்களுக்கு தன் தங்கள் ஓட்டை போடுவார்கள். தி மு க சார்பில் நிற்பவர்களுக்கு

அவர்களின் சமுதாயம் சிந்தாமல் சிதறாமல் ஒட்டு போடுவார்கள். இதில் யார் ஜெயிப்பார்கள்

என்று ஒட்டு பதிவு நடக்கும் முன்பு நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  

மீண்டும் 1986 1996 2001 ஆண்டுகளில் நாம் தனி தனியாக நின்று படித்த பாடத்தை கண்டும்,

இந்த வருடமும் பலர் நிற்பது வேதனையான விஷயம்.

முஸ்லிம் கட்சிகளின் ஓட்டுக்கள் பிரிந்து திமுக இந்த

உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப்

பெறுவதற்கு யார் உதவி இருக்கிறார்களோ இல்லையோ ஜமாஅத்

இந்த உதவியைச் செய்து விட்டது என்றுதான் கூற வேண்டும்…!

ஒற்றுமையான ஜமாஅத் என்று வெளியில் சொல்லும் நாம், நமது ஒற்றுமையா இது போல்

பொது விஷயத்தில் பொதுமக்களுக்கு நம்மை செய்யும் விஷயத்தில் காட்டவேண்டும். 

நாளும் மாறும் அரசியல் களத்தில்….மக்களுக்கு அதனால் நன்மை விளைந்தால் சரிதான்….

என்ற ஏக்கத்தோடு எமது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அரசியல் பார்வையை நிறைவு செய்கிறோம்.

நம்மில் என்று ஒற்றுமை வருகிறதோ அன்று தான்

நமதுருக்கு விடிவு, அது வரை காத்து இருப்போம்.


Advertisements