கோட்டக்குப்பத்தில் கதிரியக்க ஆபத்து


கோட்டக்குப்பத்தில்  கதிரியக்க ஆபத்து

 

செல் போன்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆறாம் விரலாக செயல் பட்டு கொண்டு இருக்கிறது. முதலில் ஒரே ஒரு செல் போன் வைத்து இருந்தோம், அடுத்ததாக ஒருவர் ரெண்டு செல் போன்கள் பயன்படுத்த தொடங்கினார்கள். இப்போது ஒரே செல் போன்களில் ரெண்டு சிம் கார்ட்கள் பயன்படுத்துகிறோம். அப்படிஇருந்தும் ரெண்டு செல் போன்கள் தான் பயன் படுத்துகிறோம். ஆனால் செல் போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிவதே இல்லை…

செல் போன்களில் பேசுவதற்கு தேவையான சிக்னல்களை இந்த கோபுரங்கள் தான் அளிக்கிறது இதற்காக, அந்த கோபுரங்களில் இருந்து மின் காந்தஅலைகள் மற்றும் கதிரியக்கம் வெளிபடுகிறது. செல் போன்கள் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையிலும் இந்த கதிரியக்கத்தின் தாக்கம் இருக்கும்.

இதன் காரணமாகவே, அதிகாலையில் மனதை மயக்கும் வண்ணம் கீதம் இசைக்கும் சிட்டுக்குருவிகள் கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை. அதுமட்டுமல்ல மைனா போன்ற பறவைகளும் அறிய வகை இனங்களாக மாறி கொண்டு இருக்கிறது.மின் கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்களில் கூடு கட்டிஉயிர் வாழும் இந்த அப்பாவி உயிரினங்கள் அனைத்தும் செல் போன் கோபுரங்களை கண்டால் மட்டும் காத தூரம் ஓடுகின்றன.

நகர்புறம் மட்டும் அல்லாமல், கிராமப்புறங்களிலும் எங்கு பார்த்தாலும் செல் போன் கோபுரங்கள் பெருகி இருப்பதால் இந்த பறவை இனங்கள் காணாமலே போய் விட்டன. பாடப்புத்தங்களில் பார்க்க வேண்டிய அறிய இனமாக மாறிக்கொண்டு வருகின்றன. இது குறித்து பல எச்சரிக்கை தகவல்கள் வெளியான போதிலும் யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லை.

முந்தைய எச்சரிக்கையை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவாக, பறவைகளிடம் இருந்து மனிதர்களை நோக்கி ஒரு அபாயம் திரும்பிக் கொண்டு இருக்கிறது. ஆம் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சினால் மனிதர்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சர்வேதேச அளவில் ஆய்வுகள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றன. இந்தியாவில் அமைக்கப்படும் செல் போன் கோபுரங்கள் அனைத்துமே, அணு அல்லாத கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கமிஷன் அளித்துள்ள பரிந்துரைப்படியே அமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த கமிஷனானது கதிரியக்க அளவு மற்றும் வெப்ப கதிரியக்கம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு விதி முறைகளை வகுக்கிறது.

மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த கமிஷன் கருத்தில் கொள்வதுதில்லை.அதே நேரத்தில் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளையத்துக்குள்ளேயே தொடர்ந்து வசித்து வருபவர்களுக்கு புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள எதிர்ப்புசக்தி குறைவதால் மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு அபாயங்கள் ஏற்படும் என மும்பை ஐ.ஐ.டியை சேர்ந்த தொழில் நுட்பவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக, சர்வேதேச அளவிலான, ஆதாரங்களை அள்ளி வீசும் அவர்கள், செல்போன் கோபுர கதிர் வீச்சால் மனநல குறைபாடு ஏற்படும் என்ற அதிர்ச்சி வெடியையும் கொளுத்திப் போடுகின்றனர். அதற்கு ஆதாரமாக, மேற்கு டெல்லியில் ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பாப்லர் சாய்கர் என்ற 21 வயது மாணவனை சுட்டிக் காட்டுகின்றனர்.

மிகவும் புத்திசாலியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த தனது மகன் மேற்கு டெல்லியில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டில் வாடைக்கு குடி புகுந்த பிறகு தான் மாறுபாடு அடைந்தான். மூன்று மாடி கொண்ட அந்த வீட்டின் மேல் தளத்தில் அவன் குடியிருந்தான். வீட்டுக்குள் செல்லும் போதெல்லாம், அளவுக்கு அதிகமான மன நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறான் என்கிறார் அந்த மாணவனின் தந்தை அவர் ஒரு என்ஜினியரும் கூட, சரி அந்த வீட்டில் அப்படி என்னதான் இருந்தது வேறோருமில்லை, மூன்று மாடிகள் கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஒரு செல் போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது…!

செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பிரச்னையின் தீவிரத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. மிக அடர்த்தியான அறியாமை இருளிலேயே நாம் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் கடந்த 9 ஆண்டுகாளாகவே இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சர்வதேச அளவில் வெளியாகி உள்ளன.ஆனால் அவை அனைத்தும் கடினமான ஜமுக்காளத்தை போட்டு மூடப்பட்டு விட்டன.

செல் போன் கோபுரங்கள் நிறுவுவதில் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது இந்தியாவில் மட்டுமே, செல் போன் கோபுரங்கள் அவுட்சோர்சிங் முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இதன் காரணமாக, ஒரே செல் போன் கோபுரத்தை 2 அல்லது 3 செல்போன்கள் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே கதிரியக்க வீச்சீன் வெளிப்பாடு அதிகரிக்கிறது உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது.

இதில்  இருந்து வரும் அலைகள் radio frequency சொல்லப்படும்

ஒரு EMR (electro-magnetic radiation) வகையை சார்ந்தது..

இது எப்படியும் நம்மளை பாதிக்கும்..பொதுவாக செல்களில்(DNA) பாதிப்பு,

மூளையில் பாதிப்பு..மூளையில் சில நேரங்களில் செல்கள் இறப்பதால்

அது Alzheimer நோயிலும் கொண்டு போய் விடும். 

மக்களை பாதிக்கும் இந்த செல் போன் கோபுரங்கள் கோட்டகுப்பத்தின் மைய பகுதியில்

இருப்பது பெரும் ஆபத்து. இதன் அடியில் தான் அரபி கல்லூரி இருக்கிறது.

கொடுமையிலும் கொடுமை ஜாமியா மஸ்ஜித் நிலத்தில் பல கோபுரங்கள் இருக்கிறது.

ஊரின் நலன் கருதி இந்த கோபுரங்களை ஊரை விட்டு திறந்த வெளியில் அமைக்க 

நமது ஜமாஅத் நிர்வாகம் மற்றும் ஊரின் பொது நல இயக்கம் பாடுபட வேண்டுகிறோம். 

Advertisements