விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்குஇலவச ஆம்புலன்ஸ் பணியில் சேர நேர்காணல்


விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்குஇலவச

ஆம்புலன்ஸ் பணியில் சேர நேர்காணல்

 

அரசு இலவச ஆம்புலன்ஸ் (108 ஆம்புலன்ஸ்) டிரைவர், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக் கான நேர் காணல் வரும் 26ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அவசர கால மேலாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் அரசு இலவச ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் வரும் 26ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது. விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள எம்.கே. மகாலில் நடக்க உள்ள நேர் காணலில் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். மருத்துவ உதவியா ளர் பணிக்கு பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் படித்து ஏதேனும் பட்டம் பெற்ற 28 முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண், பெண் கலந்து கொள்ளலாம்.டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்போர் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று குறைந்தது 5 ஆண்டு அனுபவம், வயது 25 முதல் 32 வயதிற்குட்பட்ட 162 செ.மீ.,க்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும்.மருத்துவ உதவியாளர் பணிக்கு மாதம் 7,250 ரூபாயும், டிரைவர் பணிக்கு 6,600 ரூபாயும் ஊதியம் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்கள் கல்வி, டிரைவில் லைசென்ஸ் மற்றும் அனுபவ சான்றிதழ்களோடு நேர் காணலுக்கு வரலாம்.

Advertisements