கோட்டக்குப்பத்தில் அக்டோபர் 19 அன்று உள்ளாட்சி தேர்தல்


கோட்டக்குப்பத்தில் அக்டோபர் 19 அன்று உள்ளாட்சி தேர்தல்

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.இது குறித்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மணிமேகலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல் கட்டத் தேர்தல் : அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி நகராட்சியும், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, காணை, முகையூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை ஒன்றியங்களும் மற்றும் அரகண்டநல்லூர், சின்னசேலம், மணலூர்பேட்டை, சங்கராபுரம், தியாகதுருகம், திருக்கோவிலூர், திருவெண்ணைநல்லூர், உளுந்தூர்பேட்டை, வடக்கனந்தல் பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.இரண்டாம் கட்டத்தேர்தல் : அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது, இதில் திண்டிவனம் நகராட்சியும், செஞ்சி, கண்டமங்கலம், கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், ஒலக்கூர், வல்லம், வானூர், விக்கிரவாண்டி ஒன்றியங்களுக்கும், அனந்தபுரம், செஞ்சி, கோட்டக்குப்பம், மரக்காணம், வளவனூர், விக்கிரவாண்டி பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

Advertisements