அடுத்த திருவிழா ஆரம்பம்


அடுத்த திருவிழா ஆரம்பம் !!

வருகிற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோட்டக்குப்பத்தில் தேர்தல் களத்தில் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை பேரூராட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க தனி வாக்குப்பதிவும். வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தனி வாக்குபதிவும் ஒரேநாளில் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நமக்கு நன்கு தெரிந்த உள்ளூர் பிரதிநிதிகள் மட்டுமே களத்தில் நிற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் பேரூராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விருப்ப மனு கோரி வருகின்றனர். மட்டுமல்லாது சுயேட்சைகளும் அதிகமாக களம் இறங்க இருப்பதினால் இனி கட்டம் சூடு பிடிக்கும்.

உள்ளாட்சி மன்ற தேர்தலில் நமதுரை சேர்ந்தவரை பேரூராட்சி தலைவராக்க ஊரில் இருக்கும் அணைத்து அரசியல் கட்சி மற்றும் சமுதாய இயக்கங்கள், மன்றத்தினர் ஒருமனதாக பாடுபட வேண்டுகிறோம். அணைத்து தேர்தலிலும் சமுதாயத்தில் பிளவை உண்டாகி அதன் மூலம் பலர் ஆதயம் அடைந்தனர். அது போல் நடைபெறாமல் ஜமாஅத் சார்பாக ஒருவரை முன்னிறுத்தி அவரை ஜெயிக்க வைக்க அனைவரும் பாடுபடவேண்டும். இதில் ஜமாஅத் வேட்பாளர் எந்த அரசியல் சார்பு இல்லாதவராக இருக்கனும், மேலும் அனைத்து இயக்கத்தினரின் அதரவு இருக்கனும்.

வருகிற நாட்களில் என்ன நடக்கிறது என்று இன்ஷா அல்லாஹ் பார்போம்.

Advertisements