தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நடைபெற இருந்த பேரூராட்சி முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு


தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நடைபெற இருந்த

பேரூராட்சி முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு 

தமிழக அரசு பதிவுத்துறையின் இணையதளத்தில் கோட்டகுப்பத்தின் பெயரை 

நடுக்குப்பம் என்றும், பரகத் நகர் பகுதியை பாரத் நகர்என்றும், ரஹ்மத்  நகர்

பகுதியை சின்ன முதலியார் சாவடி என்றும் பதியப்படுள்ளதை கண்டித்து

தவ்ஹித் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்த 

கடந்த 6.9.2011  அன்று கோட்டகுப்பம் காவல் 

நிலையத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது .

இதன் மேல் நடவடிக்கை எதிரொலியாக 09 .09 .2011  வெள்ளிகிழமை

        கோட்டகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து சமாதான 

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. 

அதில் கடந்த 10 .09 .2011 மாலை 4 .00  மணிக்கு 

வானூர் வட்டாச்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தவ்ஹித் ஜமாஅத்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வட்டாச்சியர் அழைப்பின் பெயரில் தவ்ஹித் ஜமாஅத் சார்பாக மாவட்ட தலைவர் I. சாகுல் தலைமையில் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். அன்று சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வராத காரணத்தினால் , மீண்டும் 12 .09 .2011 அன்று மாலை நடைபெறும் என்று வட்டாச்சியர் அறிவித்தார்கள். அதனடிப்படையில் மாவட்ட நகர நிர்வாகிகள் மீண்டும் 12 .09 .2011  திங்கள் அன்று நடைபெற்ற சமாதான கூடத்தில் கலந்துக்கொண்டனர். மேலும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரி, வானூர் சார் பதிவாளர் , கோட்டகுப்பம் பேரூராட்சி அதிகாரி, காவல் துறை உதவி ஆய்வாளர், காவல் உளவு துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தவறை ஒப்புக்கொண்ட சார் பதிவாளர், பாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் கோட்டகுப்பமாக மாற்றி விடுவதாக உறுதியளித்து கையெழுத்திட்டுள்ளார். இதனடிப்படையில் தவ்ஹித்  ஜமாஅத் சார்பாக கோட்டகுப்பம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் எதிரில் நடத்த இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளபட்டது. ஒரு மாத காலத்திற்குள் சரி செய்யப்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் வீரியமிக்க போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல் : மீடியா சாதிக்

Advertisements