நிர்வாக சபைக்கு எங்களின் வேண்டுகோள்


நிர்வாக சபைக்கு எங்களின் வேண்டுகோள்

புதியதாக புதுபிக்கப்பட்ட ஷாதி மகாலை நன்றாக பராமரிக்க

பொதுமக்களின் கோரிக்கை சிலவற்றை நிர்வாக சபைக்கு முன்வைக்கிறோம்.

மண்டபம் பாழாக முக்கிய காரணம் வெளி ஊரில் இருந்து இங்கு வந்து திருமணம் செய்பவர்களால் தான் என்று பலரின் கருத்து. ஊரில் இருக்கும் சொந்தத்தை வைத்துகொண்டு இங்கு பஸ்களில் வரும் இவர்கள் மண்டபத்தை பாழாகி விட்டு அடுத்த பஸ்சில் அவர்கள் சொந்த ஊருக்கு போய் விடுவார்கள். குறைந்த பட்சம் இவர்களுக்கு மண்டபம் வாடகை விடாமல் இருபது நல்லது.

மேலும் மண்டபம் வாடகை விடும் போது அட்வான்ஸ் தொகை வாங்கிவைத்து கொண்டு, திருமண முடிந்த வுடன்மண்டபத்தின் சாவி திருப்பி  கொடுக்கும்போது, மண்டபம் முன்பு இருந்தது போல்  இருந்தால் அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்கணும். மண்டபத்தை அசுத்தமாக வைத்து இருந்தால் அந்த பணத்தில் இருந்து பராமரிக்க காசு எடுத்தது போக திருப்பி கொடுக்கணும். இதை மண்டபத்தில் சட்டி நாற்காலி வாடகை விடுபவர்கள் தங்கள் பொருட்களில் கண்ணும் கருத்துமாக இருப்பதாய் போல் மண்டபத்தையும் பார்க்கணும்.

அடுத்து முக்கியமாக நோன்பு கஞ்சிக்கு எல்லாம் கமிட்டி அமைக்கும் நிர்வாகம், மண்டபத்தை பராமரிக்க ஒரு கமிட்டி இல்லாதது பெரிய குறை. அவர்கள் மாதத்துக்கு ஒரு முறையாவது நேரில் சென்று பார்வையிடவேண்டும். தேவையான சிறு சிறு பராமரிப்பு பணிகளை உடனே செய்யணும்.

இது போல் செய்து வந்தால் மேலே உள்ளது போல் நமது மண்டபம் என்றும் இருக்கும்.

உங்களின் கோரிகைய நீங்களும் சொல்லலாம்.

Advertisements