கோட்டக்குப்பம்மா? நடுகுப்பம்மா ? அரசு அதிகாரிகளின் அலட்சியம்


கோட்டக்குப்பம்மா? நடுகுப்பம்மா ? அரசு அதிகாரிகளின் அலட்சியம் !!!

தமிழக அரசின் பதிவு துறையில் நமது ஊரின் பெயரை உள்நோக்கத்தோடு மாற்றி உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தல் அத்திப்பட்டு போல் நமதுரின் பெயரும் அரசு பதிவுகளில் இருந்து கூடிய சிக்கரத்தில் மறைந்து போகும்நிலை உள்ளது .

அதிர்ச்சி அளிக்கும் உண்மை

 

தமிழக அரசின் பல துறைகளில் கோட்டகுப்பம் என்ற பெயர் கிடையாது. அவர்கள் பாஷையில் நமதுரின் பெயர் நடுக்குப்பம். பல நுற்றாண்டு கால பாரம்பரியம் உள்ள நமதுரின் பெயரை யாரை கேட்டு அரசு அதிகாரிகள் மாற்றினார்கள் என தெரியவில்லை. அவர்களின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இப்போது நாம் இதை கேட்காவிட்டால் இனி ஊரில் உள்ள அணைத்து பெயர்பலகையிலும் நடுக்குப்பம் பெயரை மாற்ற வெகு காலம் ஆகாது.

கோட்டகுப்பம் பேரூராட்சி, அதனை சுற்றி பல ஊர்கள் (சின்னகோட்டகுப்பம்,சோதனைகுப்பம், தந்தாராயண்குப்பம், ரஹாமத் நகர், பர்கத் நகர், இந்திரா நகர், நடுக்குப்பம் காலனி, சின்ன மற்றும் பெரிய முதலியார் சாவடி) உள்ளன, அனால் நடுக்குப்பம் என்ற பெயர் மட்டும் அதிக அளவில் உபயோகிக்கப்பட்டுள்ளது அதன் காரணம் என்ன, இதனால் யாருக்கு லாபம், பின் வரும் காலங்களில் இதன் மாற்றம் எப்படி இருக்கும்.ஊரில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, கோட்டகுப்பம் பெயரை அனைத்து அரசு பதிவுகளிலும் மிண்டும் கொண்டுவர போராடவேண்டும். மேலதிக விபரங்களுக்கு 

This slideshow requires JavaScript.

 

Advertisements