எஸ்எம்எஸ் செய்தால் வீடு தேடு வரும் சிலிண்டர் சேவை


எஸ்எம்எஸ் செய்தால் வீடு தேடு வரும் சிலிண்டர் சேவை

புதுவையில் பாரத் சமையல் எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு எஸ்எம்எஸ் மூலம் பதிவு செய்யும் சேவையை மாவட்ட ஆட்சியர் ராகேஷ் சந்திரா துவக்கி வைத்தார்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நுகர்வோருக்கு தங்குதடையின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்க புதிய தொழில்நுட்பத்துடன் திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. எரிவாயு சிலிண்டர் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் எல்பிஜி என டைப் செய்து 57333 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்தால், சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். இந்த சேவையை பெற வேண்டுமெனில் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை பாரத் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த சேவையின் துவக்க நிகழ்ச்சி சன்வே ஓட்டலில் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதனை குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ராகேஷ் சந்திரா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனின் தென் மண்டல மேலாளர் சங்கரன், மண்டல மேலாளர் ராமானுச்சாரி, விற்பனை அதிகாரி ஜாக்கி ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Advertisements