விழுப்புரம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர்


விழுப்புரம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர்

news0806111.jpg (22048 bytes)

 விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முறையாக பெண் கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கடந்த 1994ம் ஆண்டு புதிதாக துவக்கப்பட்டது. அதுவரை ஒருங்கிணைந்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் அடங்கிய தென்ஆற்காடு மாவட்டமாக இருந்தது. இது விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டத்தில் சந்திரலேகாவும், அதன் பின்பு கரியாலியும் கலெக்டர்களாக பதவி வகித்தனர். விழுப்புரம் மாவட்டம் துவக்கப்பட்டு, 17 ஆண்டுகளில் இதுவரை பெண் கலெக்டர் நியமனம் செய்யப்படவில்லை. இம்மாவட்டத்தில் முதன் முறையாக பெண் கலெக்டர் மணிமேகலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் மாற்று திறனாளி துறையின் மாநில ஆணையராக இருந்து விழுப்புரம் கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisements