ஹஜ் யாத்திரைக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வலியுறுத்தல்


ஹஜ் யாத்திரைக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வலியுறுத்தல்

 

ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வோரில் புதுவையை

சேர்ந்தவர்களுக்கு 11 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் ,

இதற்கு முதல்வர் ரங்கசாமி உரிய தீர்வு காண

வேண்டுமென்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுவை மாநில ஹஜ் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை

மேற்கொள்ள 305 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதில் 52

பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 26 பேர் மாகியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில்

உள்ளதாக ஹஜ் கமிட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.

புதுவையில் கடந்த கால முஸ்லீம்களின் எண்ணிக்கையை வைத்து தற்போது 11 இடங்கள்

மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கும் செயல் என இஸ்லாமிய அமைப்பினர்

கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இப்பிரச்னையில் முதல்வர் ரங்கசாமி தலையிட்டு

உரிய தீர்வினை காண வேண்டுமென்று அவரை செவ்வாய்க்கிழமை

சந்தித்த இஸ்லாமியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த காலங்களில் 300க்கும் மேற்பட்ட நபர்கள், இந்திய ஹஜ்

கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டு,

ஹஜ் கடமையை நிறைவேற்றி உள்ள நிலையில், புதுவை மாநிலத்தில்

இந்த ஆண்டு ஹஜ் பயணம்

விண்ணப்பம் செய்தவர்களின் நிலைமை, ஹஜ் கமிட்டியின் செயலால் கவலைப்பட

வைத்துள்ளதாக இஸ்லாமிய பெரியவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements