கோட்டக்குப்பம் – கருவடிக்குப்பம் பை பாஸ் சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்


கோட்டக்குப்பம் – கருவடிக்குப்பம் பை பாஸ்

சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்

கருவடிக்குப்பம் –  கோட்டக்குப்பம் இசிஆர் சாலை பணிகள் முழுவீச்சில் மீண்டும் நடைபெற்று வரும் நிலையில், சிலவீடுகள் இடையூறாக உள்ளன. அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்க அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற ஏற்கனவே வருவாய் அதிகாரிகள் உத்தரவிட்டும் ஒருசிலர் வீடுகளை காலிசெய்யாமல் உள்ளனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஓரிரு வாரங்களில் அவர்களை காலி செய்ய முடிவெடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோட்டக்குப்பம்& கருவடிக்குப்பம் பை பாஸ் சாலை பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. 3 மாதங்களில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுவையில் இப்பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் விரைவில் இடிக்கப்படுகிறது.

புதுவையில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க ரங்கசாமி ஏற்கனவே முதல்வராக இருந்த போதே சட்டசபையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற வைத்திலிங்கம் ஆட்சியிலும் இதுபற்றிய தகவல் வெளியிடப்பட்டது. இருப்பினும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இதற்கிடையே 3வது முறையாக முதல்வராக பதவியேற்ற ரங்கசாமி, போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை ரகசிய சர்வே எடுத்தார். பட்ஜெட் தொடரில் சாலைகளை மேம்படுத்துதல் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கோட்டக்குப்பம், முத்தியால்பேட்டை வழியாக கருவடிக்குப்பம் 100 அடி சாலைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதுடன், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

கருவடிக்குப்பம் 100 அடி சாலையிலிருந்து முத்தியால்பேட்டை செல்லாமல் நேரடியாக கோட்டக்குப்பம் மெயின்ரோட்டுக்கு செல்லும் வகையில் பை பாஸ் சாலை அமைக்க இருமாநில அரசுகளும் சேர்ந்து திட்டமிட்டது. இதில் தமிழக பகுதிக்குட்பட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.11 கோடியில் கடந்த அக்டோபரில் பணிகள் தொடங்கப்பட்டன.

சென்னை எஸ்பிஎல் காண்ட்ராக்ட் நிறுவனம் மூலம் 2011 ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. டிசம்பரில் பெய்த கனமழையால் இப்பணிகள் பாதிக்கப்பட்டன. ஓடையில் தண்ணீர் ஓடியதால் பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெறவில்லை. தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் பாலம் கட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சில அரசியல் குறுக்கீடு காரணமாக கடந்த 2 மாதமாக நடைபெறாமல் இருந்த பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

ஜல்லிகள், செம்மண் அடிக்கப்பட்டு சாலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் சிமெண்ட் குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் 3 மாதங்களில் பணிகள் முற்றிலும் முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இப்பணிகள் முடிந்தாலும் புதுவை மாநிலத்திற்குட்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படாமல் உள்ளது.அவற்றை விரைந்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது.

3 மாதங்களில் முடிக்க திட்டம்

ஜல்லிகள், செம்மண் அடிக்கப்பட்டு சாலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் சிமெண்ட் குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் 3 மாதங்களில் பணிகள் முற்றிலும் முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இப்பணிகள் முடிந்தாலும் புதுவை மாநிலத்திற்குட்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படாமல் உள்ளது.அவற்றை விரைந்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே ரூ.60 லட்சத்தில் புதுவை பகுதிக்கான பணிகள் தொடங்கப்பட்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சாலைபோடும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். புதுவையிலும் இப்பணிகள் விரைந்து நடைபெற்றால்தான் 2012ல் கருவடிக்குப்பம் – கோட்டக்குப்பம் பை பாஸ் சாலை பணிகள் முழுமை பெற்று பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும். எனவே இதற்கான வேலைகளை புதுவை அரசும் முனைப்புடன் தொடங்க வேண்டுமென்று தமிழக மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் முத்தியால்பேட்டை, கோட்டக்குப்பத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் கடலூர் செல்லும் வாகனங்கள் புதுவைக்குள் நுழையாமல் பை&பாஸ் வழியாக விரைந்து செல்ல முடியும். எனவே இருமாநில அரசுகளும் கருவடிக்குப்பம்& கோட்டக்குப்பம் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisements