கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்


கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு  முஸ்லீம்

முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

கோட்டக்குப்பம் பகுதியில் ஏற்படும் மின்தடையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கோட்டக்குப்பத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக கோட்டக்குப்பம் நகர தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கி னார். விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் முகமது, கோட்டக்குப்பம் நகர செயலாளர் முகமது அலி, நகர பொருளாளர் அக்பர் அஹ்மல் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் சயலுல்லாபுதின், விழுப்புரம் மாவட்ட தலைவர் முஸ்டாக் தீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோட்டக்குப்பத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நகர இளைஞரணி செயலாளர் அன்பு நன்றி கூறினார்.

Advertisements