தவ்ஹீத் ஜமா அத்பொதுக்குழு கூட்டம்


தவ்ஹீத் ஜமா அத்பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாவட்ட பொதுக் குழு கூட்டம் கோட்டகுப்பத்தில் நடந்தது.மாநில தலைவர் ஜைனுலாப்தீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சாதிக் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக சாகுல், செயலா ளராக முகமது சலீம், பொருளாளராக முகமது இஸ்மாயில், துணைத் தலைவர் முஜிபுர், துணை செயலாளர் அன்சாரி தேர்வு செய்யப்பட்டனர்.கோட்டக்குப்பத்தில் அதிகளவு நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் அதிகளவு மின்வெட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisements