வானூர் தொகுதியில் தி மு க வெற்றி வாய்ப்பு


 

செ.புஷ்பராஜ் எம்.எல்.ஏ., தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே இருந்த கண்டமங்கலம் தொகுதியில் வென்றவர். ஆனால், ‘அதன் பிறகு தொகுதிப் பக்கமே வருவது இல்லை. அடிப்படை வசதிகள்கூட செய்யவில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் கும்மியடிக்கின்றன. இவ்வளவு அதிருப்தி இருந்தாலும்கூட, இவருக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் களம் இறங்கியிருக்கும் ஐ.ஜானகிராமன், அவ்வளவு பிரபலமான ஆளாக இல்லை. ஏற்கெனவே ஒரு முறை சேர்மன் பதவிக்காகப் போட்டியிட்டுத் தோற்றதோடு சரி. மக்களிடமும் அதிக ஆதரவு தென்படவில்லை என்பதால், இங்கே தி.மு.க​-வுக்கே ஜெயம்!

Advertisements