கோட்டகுப்பம் மக்கள் வாக்கு உங்களுக்கு வேண்டுமா ?


ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல் திருவிழா மீண்டும் வந்துள்ளது.

இதனால் ஆட்சி மாறும் அல்லது அதே ஆட்சி தொடரும்,

ஆனால் நமதுரின் நிலையில் ஒரு மாற்றம் கூட நிகழபோவது இல்லை.

நமது கோட்டகுப்பம் நிர்வாக ரீதியாக பாண்டிச்சேரி அருகில்

இருபது தான் ஒரே குறை மற்றும் நிறை. மாவட்ட நிர்வாகம் விழுப்புரத்திலும்,

கோட்ட நிர்வாகம் வானூர்ரில் இருப்பது பெரிய குறை. ஆத்திர அவசரம்

என்றாலும் மேல இருக்கும் ஊர்களுக்கு போவது பெரும் பாடு.

இதற்கு ஒரே தீர்வு வரும் சட்டமன்ற தேர்தலில் நமக்கு

தேவையானதை செய்து கொடுக்கும் வேட்பாளருக்கு ஒட்டு போடுவது தான் ஒரே வழி.

நமதுரின் பல ஆண்டு காலமாக நிலவி

வரும் பிரச்சனைகளின் ஒரு சில இதோ

கோரிக்கை 1

50000 மக்கள் தொகை மேல் வசிக்கும் தேர்வுநில பேருர்ராட்சி நிலையில் உள்ள

கோட்டக்குப்பத்தில் ஒழுங்கான கழிவு நீர் வெளியேறும் வசதி இல்லை.

இதனால் பல நோய்கள் வீடு தேடி வருகிறது

கோரிக்கை 2

அணைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுபினர்களும் தங்கள் தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து

குறைந்த பட்சம் பயணிகள் நிற்கும் குடை அமைப்பார்கள், பல ஆண்டுகளாக நமதூரில் அப்படி ஒன்று

இருப்பதை யாராவது பார்த்தது உண்ட. கோவில் மேடு அருகிலும், கோட்டகுப்பம் காவல் நிலையம் அருகிலும்

பல பொது மக்கள் வெயில் மழையில் குழந்தையை வைத்து கொண்டு பஸ்காக பல மணிநேரம்

காத்து இருப்பது அன்றாடும் நிகழும் நிகழ்வு.

கோரிக்கை3

கோட்டகுப்பம் சுற்றி இருக்கும் அணைத்து ஏழை மாணவர்களுக்கு ஒரே அரசு பள்ளிக்குடம் இது ஒன்று தான்.

சமிபத்தில் மேல்நிலை பள்ளிக்கு தரம் உயர்த்த பட்ட நிலையில் சரியான வகுப்பறை கிடையாது, இதே நிலை தான்

கோட்டகுப்பம் ஊரில் உள்ளே இருக்கும் நடுநிலை பள்ளியின் நிலையும் இதே தான்.

கோரிக்கை 4

வானூர் வட்டத்தில் நமதூரில் தான் அதிகளவு மின்சாரம் வரி செலுத்த படுகிறது, அந்தளவுக்கு மின்சார கொள்முதல்

செய்யும் நமக்கு ஒரு துணை மின் நிலையம் வேண்டி பல போராட்டம், சாலை மறியல் செய்தும் இது வரை

அதற்கு ஒரு தீர்வு இல்லை. ஆட்சியாளரின் அலசிய போக்கே இதற்கு காரணம். பயனில் உள்ள அணைத்து

டிரான்ஸ் பரம்களும் பழைய நிலையில் உள்ளதால், அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்க படுகிறது. மேலும் கோட்டகுப்பம்

இன்றைய நிலையில் படுவேகமாக புதிய நகர்கள் உருவாகிறது. அணைத்து மக்களுக்கும் வேண்டி புதிய டிரான்ஸ் பரம் வேண்டும்.


கோரிக்கை 5

கிழக்கு கடற்கரை சாலை நமதுரை கடந்து செல்வதால் காலை மற்றும் மலை நேரங்களில் கடும்

போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது. நமதூர் காவல் நிலையத்தில் போக்குவரத்துக்கு காவலர்கள்

இல்லாமல் இருப்பது தான் இதன் குறை.  புதிய போக்குவரத்துக்கு காவல் நிலையம் அமைப்பது தான் இதற்கு தீர்வு.

கோரிக்கை 6

கோட்டக்குப்பத்தில் நிறைய குடிசைகள் உள்ள ஊர். அடிகடி குடிசைகள் எரிந்து ஏழை மக்கள் வாழ்வில்

அடிப்பது இங்கே சர்வசாதாரணம். ஆபத்தில் தீ அணைக்கும் நிலையம் அருகில் கிடையாது. பல கிலோமீட்டர் துரம்

உள்ள வானூர் அல்லது விழுப்புரத்தில் இருந்து தீ அணைக்கும் வண்டி வரும் வரை காத்து இருப்பதால், அந்த தீ பல

குடிசைகளை நாசம் பண்ணிவிடுகிறது. பக்கத்தில் பாண்டிச்சேரி தீ அணைக்கும் நிலையம்

இருந்தும் நிர்வாக ரீதியாக உடனே நமக்கு வர மறுகிறார்கள்.

கோரிக்கை 7

தாய் சேய் நல விடுதி இருந்தும், அதனால் ஒரு பயனும் கிடையாது, கோட்டகுப்பம் மக்களின்

நீண்ட  கால கோரிக்கையான ஒரு மருத்துவமனை இதுவரை ஒரு கனவாக உள்ளது.

கோரிக்கை 8

108 ஆம்புலன்ஸ் வசதி, அப்படி என்றல் என்ன என்று கேட்கும் நிலையில்

தன் கோட்டகுப்பம் மக்கள் உள்ளார்கள். அரசின் பெரும்பாலும்

நல திட்டங்கள் எங்களுக்கு என்றும் கிட்டியது இல்லை.

மேலே உள்ளது பல கோரிக்கையில் ஒரு சில தான், இதையாவது நம்மிடம் வாக்கு

கேட்டு வரும் வேட்பாளர் செய்து கொடுப்பது தொடர்பாக வாக்கு கொடுத்தல்,

நம் அனைவரும் சிந்தாமல் சிதறாமல் நமது வாக்கை அளிப்போம்.

இது தான் நேரம் இதை விட்டு விட்டால் அப்புறம்

அடுத்த 5 வருடம் காத்து இருக்கனும்.

சிந்திப்போம்!! செயல்படுவோம்!!

Advertisements