வானூர் தொகுதியில் போட்டியிட புஷ்பராஜ் எம்எல்ஏ மனு தாக்கல்


வானூர் தொகுதியில் போட்டியிட புஷ்பராஜ் எம்எல்ஏ மனு தாக்கல்

 

வானூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விழுப்புரம் ஆட்சியர்

அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரான சமூக பாதுகாப்பு

திட்ட தனித்துணை ஆட்சியர் நாகராசுவிடம் புஷ்பராஜ் எம்எல்ஏ நேற்று

வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் 2&வது முறையாக போட்டியிடுகிறார்.

இவரது மனைவி கவுரியும் மகன் மனோஜ்குமாரும்,

மகள்கள் கிரண்திகா, பூமாலை உள்ளனர்.

1996 மற்றும் 2001ல் நடந்த உள்ளாட்சி தேர்தல்,

2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெற்றுள்ளார்.