கோட்டக்குப்பத்தில் 200 பேர் திமுகவில் இணைந்தனர்


கோட்டக்குப்பத்தில் 200 பேர் திமுகவில் இணைந்தனர்

 

 

கோட்டக்குப்பத்தில் வானூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சண்முகம்,

பேரூராட்சி தலைவர் பானுமதி ஜெயமூர்த்தி ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு வேட்பாளர் புஷ்பராஜை அறிமுகப்படுத்தினர்.

பின்னர் பாமக நகர செயலாளர் கதிரேசன், விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் தமிழொளி,

முஸ்லீம் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்து ஓட்டு கேட்டனர்.

பின்னர் கோட்டக்குப்பம் பழைய பட்டிணம் பகுதியில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்

200 பேர் முகமது அலி, முகமது ரபீக் தலைமையில் புஷ்பராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட திமுக மீனவர் அணி துணை அமைப்பாளர் மணி,

கோட்டக்குப்பம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி, நகர அவைத்தலை வர் பஷீர்,

நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, ஒன்றிய மீனவ பிரிவு செயலாளர் சுப்பிரமணி,

திமுக கவுன்சிலர்கள் தேசப்பன், சண் முகம், சரவணன், விஜயஆனந்த், பிரகாஷ், வானூர் ஒன்றிய

பொறுப்பு குழு செயலாளர் முரளி, வானூர் ஒன்றிய பொறுப்புக்குழு துணைச்செயலாளர் கலைமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisements