முதல்ல சொன்ன இலவச டிவி யா ஒழுங்கா கொடுங்க அப்புறம் பார்க்கலாம் மிக்சி கொடுப்பதை பற்றி


முதல்ல சொன்ன இலவச டிவி யா ஒழுங்கா

கொடுங்க அப்புறம் பார்க்கலாம் மிக்சி கொடுப்பதை பற்றி

தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக, அ.தி.மு.க.,

தேர்தல் அறிக்கையிலும், பல இலவசங்களை வழங்குவது

தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. இது தொடர்பாக

அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும்.

* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம்.

* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன் வழங்கப்படும்.

* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.

* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.

* அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.

* அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அரசின் சார்பில் கேபிள், “டிவி’ இணைப்பு வழங்கப்படும்.

* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 30 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* குடும்ப அடடைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ஒரு லிட்டர் இலவச மண்ணெண்ணெய்.

* அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் இலவச கல்வி உதவித்தொகை.

* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் இலவச, “லேப்-டாப்’ வழங்கப்படும்.

* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க., வெளியிட உள்ள

தேர்தல் அறிக்கையில், அதிகாரப்பூர்வமாக இவையெல்லாம் இடம்பெற உள்ளன.

கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுக்கப்பட்ட

இலவச டிவி இன்னும் கோட்டகுப்பம் மக்களுக்கு

கொடுக்கவில்லை அதற்குள் புது தேர்தல் அறிக்கை,

யாரை ஏம்மாற்ற இது.

மக்களே விழுப்புணர்வு கொள்ளுங்கள்.

Advertisements