செயல்படாத கோட்டகுப்பம் ஜமாஅத் !!!


செயல்படாத கோட்டகுப்பம் ஜமாஅத் !!!

சமிபத்தில் ஒரு தரப்பு இளைஞர்கள் பிரச்னைகுரிய

நோட்டீஸ் வெளியிட்டதை தொடர்ந்து

(அந்த நோட்டீஸ் இணையத்தில் வெளியிட முடியாத

அளவுக்கு கொச்சையான வார்த்தைகள் உள்ளது)

கோட்டக்குப்பத்தில் இரண்டு வாரங்களாக இரண்டு தரப்பு

இளைஞர்கள் மத்தியில் உருவான பிரச்சனையை,

ஜமாஅத் தலைவர்கள் சமாதான செய்யாமல் விட்டதால்,

மிலாத் நபி அன்று ஷாதி மகாலில்

சாப்பாடு விநியோகித்த முன்று நபர்களுக்கு கத்தி

குத்து நடக்கும் வரை சென்றுள்ளது.

இந்த பிரச்சனை நடக்கும் போது நான்கு ஜமாஅத் உறுபினர்கள்

அருகே இருந்தும், அதை தடுக்காமல் விட்டதோடு நில்லாமல்,

காவல் நிலையத்தில் புகார் செய்யாமல் ஓடி ஒளிந்தார்கள்.

மேலும் சம்மந்த பட்டவர்களை ஊரை விட்டு

விலகுவதாக சொல்லி உள்ளார்கள், இத்தனைக்கும்

இந்த இளைஞர்கள்

தான் புது ஜமாஅத் அமைய பாடுபட்டவர்கள்.

இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால்,

சம்மந்த பட்ட இரண்டு இளைஞர் அணியும்

ஒன்றாக சமாதானம் இருகிறார்கள். இந்த பிரச்சனையை

பெரியதகாமல் ஆரம்பத்தில் தடுக்க தவறிய

இந்த ஜமாத்தை பொது மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த சிறிய பிரச்சனையை தடுக்க தெரியாத இந்த ஜமாஅத்,

இனி வரும் காலங்களில்

ஊரில் நடக்கும் பிரச்சனையை எப்படி தடுப்பார்கள் என்பது கேள்விகுறி.

சகோதர இளைஞர்கலே, உங்களுக்குள் இருக்கும்

பிரச்சனையை சகோதர

மனதோடு பேசி தீர்த்துகொள்ளுங்கள்,

வன்முறை வேண்டாம்

Advertisements